உடம்பில் உயிர் எங்க இருக்குனே இன்னும் தெரியலை, ஆனா கற்பு எங்க இருக்குன்னு கண்டு புடிச்சாச்சு...
வன்புணர்வு செய்யப்பட்ட பெண் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் இல்லைனா நாட்டாமை ‘கெடுத்தவனுக்கே’ அந்த பெண்ணை கட்டி வச்சுருவாரு. இந்த அக்கிரமத்தை எதிர்த்து விவேக் ஒரு படத்தில் நாட்டாமையின் தீர்ப்பை மீறி, குற்றம் செய்தவனுக்கு தண்டனை கொடுப்பதை காமெடி காட்சி ஆக்கி விட்டார்கள்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் அடுத்த நாள் எப்படி இருக்கும்? சம்பவம் நடந்த அதே நேரத்தை அடுத்த நாளும் கடிகாரம் காட்டும். ஒவ்வொரு வருஷமும் காலண்டர் அந்த தேதியை நியாபகப்படுத்தும்.
காலில் மிதிச்ச காஞ்சு போன சகதி மாதிரி, அந்த சம்பவம் மேலே ஒட்டிக் கொண்டு கனமா இருக்கும். லேசுல கழுவ முடியாது. சோகமாக இருக்கனும். சிரிக்கக் கூடாது, சாப்பிடக் கூடாது, பழைய மாதிரி இயல்பா மாறிடக் கூடாது.
“பழசை நினைச்சு இப்படியே இருந்தா எப்படி? ஆக வேண்டிய காரியத்தைப் பாரு” அப்படின்னு சொல்லுவாங்க. சரி அதுவும் உண்மைதான் என்று அந்த பொண்ணு வேலைக்கு கிளம்பினால், ‘என்ன அதுக்குள்ள போற’ ன்னு உக்கார வச்சுருவாங்க. இதுபோல வன்புணர்வுக்குட்பட்ட, இயல்பு நிலைக்கு திரும்ப நினைக்கும் ஒரு பதினாறு வயசு பொண்ணு என்னவெல்லாம் அனுபவிக்கிறாள் என்பதே Unbelievable தொடரின் கரு. அவள் மட்டுமல்ல ஒரே குற்றவாளியால் தங்களது இயல்பு வாழ்க்கையை தொலைத்த மற்ற பெண்களையும் பற்றியது.
பல வருஷமா செஞ்ச தவறை சரி செய்ய இந்த தினத்தை நியாபகப்படுத்துறது மட்டும் இனிமே போதாது. அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகனும், அதுக்கு ஜனரஞ்சகமான ஊடகங்களை பயன்படுத்திக்கனும். அதுல எனக்கு தெரிஞ்சது சினிமா.
நம்ம ஊர் சினிமால சுலபத்துல நான் பாக்காத ஒரு விஷயம், கற்பழிப்புன்னு சொல்லப்படுற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு பின் நடக்கும் சம்பவங்கள். அதை 8 எபிசோட்களில் ரொம்ப நுணுக்கமா காட்டிருக்காங்க.
கண்டிப்பா பாருங்க, தெரிஞ்சவங்களை பாக்க வைங்க.... உங்க கிட்ட இந்த மாதிரி எதாவது படைப்பு இருந்தா அதைப்பத்தி மத்தவங்களுக்கு ஊடகங்கள்ள சொல்லுங்க...
அக்கினி சிறகே ஸ்டேட்டஸ் எப்போ வேணா போட்டுக்கலாம்...
சிங்கப்பையா....சிங்கப்பையா...
Comments