top of page

After Shock [Podcast]: ஷாக் after a ஷாக்


இவ்வளவு வேகமாக எந்த பாட்கேஸ்ட்டையும் கேட்டு முடித்ததில்லை. முதல் எபிசோட் முடிந்த உடனேயே, அடுத்து எப்போது நேரம் கிடைத்தாலும் கேட்டு விட வேண்டும் என்று அத்தனை எபிசோட்களையும் டவுன்லோட் செய்து வைத்து கேட்டேன்.


பொதுவாக கதை (Fiction) பாட்கேஸ்ட்கள் இரு வகைப்படும். ஒன்று கதையை ஒருவர் மட்டும் வாசிப்பது (சிலர் குரல் ஏற்றி இறக்கி, குரல் மாற்றியெல்லாம் பேசுவார்கள்), இன்னொன்று Immersive எனப்படும் திரைப்பட ஆடியோ போன்றவை (ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒருவர் குரல் கொடுத்திருப்பார்கள்). இரண்டாம் வகைதான் பெரும்பாலும் எனது தேர்வு.


யாரோ அல்லது ஏதாவது ஆர்ட்டிக்கிளில் பரிந்துரை செய்வது பெரும்பாலும் கொஞ்ச நேரத்தில் போரடித்து விடும். ஒரு வேளை எனது அதிக எதிர்பார்ப்பாகக் கூட இருக்கலாம்.

எனவே நானாக நீண்ட நேரம் தேடித் தேடி summary பிடித்திருந்தால், follow செய்து கொள்வதுண்டு. அப்படி யதேச்சையாகக் கண்டு கொண்டது தான் After Shock.


ஒரு பெரிய பூகம்பத்திற்கு பின்னர் கடலுக்கு அடியில் இருந்து ஒரு தீவு தோன்றுகிறது. கதை நாயகர்களுக்கு அதற்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன்பின் நடக்கும் மர்மங்களே கதை.

முதல் முதலாக ஆங்கில Fiction பாட்கேஸ்ட் கேட்கப் போகிறீர்கள் என்றால் இதைத் தேர்வு செய்யலாம். Walking Dead தொடர் போலக் கதைக் களம் இருந்தாலும் விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது. வசனங்களும் பேச்சு நடையும் மிகவும் எளிதாகவே இருக்கிறது.

Surrounding ஆடியோ அவ்வளவு இயல்பாகச் சேர்க்கப்பட்டிருப்பதால், கதையுடன் ஒன்றிப் போக முடிகிறது.


திரைப்படம் போல கதையை Non-linear ஆக கொண்டு செல்வதெல்லாம் ஆடியோ தளத்தில் மிகப்பெரிய சவால். திரைப்படம் பார்க்கும் போது, வெறும் காட்சியைப் பார்த்தே scene ஐப் புரிந்து கொள்ளலாம், ஆனால் பாட்கேஸ்ட்டில் முழுமையாக லயித்துக் கேட்க வேண்டியிருக்கும். 30 நொடி கவனம் சிதறிவிட்டாலும், கதை ஒன்றுமே புரியாமல் போய்விடும். ஒவ்வொரு episode உம் 28-30 நிமிடங்கள் இருக்கும் (விளம்பரங்கள் சேர்த்து)


இதற்கு மேல் Spoilers வரும் 😈


பொதுவாக கதையில் ஒரு முடிச்சு போதும் என விட்டுவிடுவார்கள் Show creators. ஆனால் முடிச்சு மேலே முடிச்சு போட்டுக் கொண்டே போகிறார்கள். முதலில் தீவு, பின்னர் McKayla க்கும் Kassie க்கும் உள்ள உறவு, தீவுக்குள் வேறு ஆட்கள், Epidomic, மர்ம சாவுகள், கொலைகள், கடைசியில் Wayne யார் என்று தெரிய வருவது என ஏகப்பட்ட பகீர் திருப்பங்கள்.


இரண்டாம் சீசன் வரும் என நினைக்கிறேன். 2022 ஆம் ஆண்டின் சிறந்த பாட்கேஸ்ட்டாக nominate செய்யப்பட்டிருக்கிறது என Twitter இல் சில பதிவுகள் பார்த்தேன். விருது பெற்றதா எனத் தெரியவில்லை. ஒரு முக்கியமான விஷயம், இந்த பாட்கேஸ்ட் Remote ஆகப் பதிவு செய்யப்பட்டது, கொரோனா காரணமாக. எப்படி பதிவு செய்யப்பட்டது என்ற making ஒரு தனி எபிசோடாகக் கொடுக்கப்பட்டுள்ளது.


ஒரே திகிலா இருக்கப்பா...


19 views0 comments

Comments


bottom of page